Whatsapp-க்கு விழப்போகும் பங்கமான அடி! வேறொரு செயலிக்கு படையெடுக்கும் பயனர்கள்!
வாட்ஸ்அப் அதன் தனியுரிமை விதிகளை புதுப்பித்ததையடுத்து, லட்சக்கணக்கான பயனர்கள் அதற்கு நிகரான வேறு சில செயலிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வாட்ஸ்அப் நிறுவனம் ஜனவரி 6-ஆம் திகதி அதன் தனியுரிமை விதிகளை புதுப்பித்தது. வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை விதிமுறைகள், பயனர்களின் இருப்பிடம் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட பயனர் தரவுகளை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற மற்ற பிரிவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளன.
இதனால் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போகும் என , வாட்ஸ்அப்பின் இந்த முடிவுக்கு உலகம் முழுக்க எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக பல பயனர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற தளங்களுக்கு இடம்பெயர பரிந்துரைக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் பயனர்கள் Signal எனும் தகவல் தொடர்பு செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு நாளும் Signal செயலியை கிட்டத்தட்ட 1 மில்லியன் புதிய பயனர்கள் இன்ஸ்டால் செய்துவருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 810,000 பயனர்கள் Signalஐ நிறுவியுள்ளனர். இது வாட்ஸ்அப் அதன் தனியுரிமை விதிகளை புதுப்பித்த ஜனவரி 6-ஆம் தேதியில் Signalஐ பதிவிறக்கம் செய்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 18 மடங்கு அதிகமாகும்.
அதே நாளில், வாட்ஸ்அப்பின் தினசரி இன்ஸ்டால் என்னைகை 7% குறைந்துள்ளது. இந்த நிலையில், நாளுக்கு நாள் வாட்ஸ்அப்பின் பயன்பாடு குறைந்து வருவதால், இன்னும் சில வாரங்களில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், Signal-க்கு நாளுக்கு நாள் அதிக பயனர்கள் நுழைவதால், அதனை சமாளிக்க கூடுதலாக server-களை இயக்கிவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.