எப்போதும் உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுதா? இதனை சரி செய்ய சில எளிய டிப்ஸ் இதோ!
பொதுவாக நம்மில் பலருக்கு எண்ணெய் சருமம் காணப்படும். அதிலும் முகத்தில் எவ்வளவு மேக்கப் போட்டாலும் கொஞ்ச நேரத்திலேயே எண்ணெய் வழிய ஆரம்பித்துவிடும்.
இதனால், முகமே பொலிவிழந்து அங்காங்கே வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். அதுவே அளவுக்கு மீறினால் சிக்கல் தான். அதுவும் வெயில் காலம் வந்துவிட்டால் இன்னும் அதிகமாகிவிடும்.
எனவே, இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.
இதன் மூலம் அழகான, பளிச்சென்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- துளசி
- வேப்பிலை
- புதினா
செய்முறை
முதலில், மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி.
முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.