உங்க சருமம் வறண்டு மோசமான நிலையில் இருக்குதா? அப்போ பப்பாளி தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!
Beauty Tips
By Kishanthini
பொதுவாக சரும பராமரிப்பு என்று வரும் போது இயற்கையான பொருட்களுக்கு மாற்று என்று எதுவுமில்லை என்றே தான் சொல்லலாம்.
இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது சருமத்தை ரசாயன தீங்கில் இருந்து பாதுகாக்க முடியும். இரசாயனங்களால் ஆன பொருட்களை பயன்படுத்துவதால் நமது சருமம் வறண்டு சில சமயங்களில் மிக மோசமடைய கூடும்.
எனவே எவ்வித பக்கவிளைவுகளுமின்றி நமது சருமத்தை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைத்து கொள்ள இயற்கை பொருட்களான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்து சிறந்தது.
அந்தவகையில் தற்போது வறண்டு போன் மோசமான சருமத்தை மீட்டெடுக்க கூடிய ஒரு அற்புதமான ஃபேஸ் பேக் ஒன்றை எப்படி தயாரிப்பது? எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பப்பாளி தோல்- ஒரு டீஸ்பூன்
- பால்- ஒரு டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - கால் கப் தண்ணீர்
செய்முறை
- பப்பாளித் தோல்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அதில் பால் சேர்த்துக் கொள்ளவும். இவை இரண்டையும் மென்மையான தன்மை வரும் வரை நன்றாக கலக்கி கொள்ளவும்.
- பிறகு இந்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். 5 லிருந்து 10 நிமிடங்களுக்கு இந்த ஃபேஸ் பேக்கை அப்படியே உலர விடவும். இப்போது நீங்கள் பயன்படுத்த தேவையான ஃபேஸ் பேக் தயார்.
- ஃபேஸ்பேக் போடுவதற்கு முன்பு உங்கள் முகத்தை மிதமான தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
3 முதல் 5 நிமிடங்கள் சருமத்தில் மெதுவாகத் தடவவும்.
- இப்போது இந்த ஃபேஸ் பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளவும். உடனடியாக சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- ஏனெனில் இது சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கிவிடும்.
ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்திற்கு வாரத்துக்கு இரண்டு முறை இதுபோன்ற ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US