அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு
Isaias hurricane attack florida and 4 killed: அமெரிக்காவில் இசையாஸ் சூறாவளியால் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இசையாஸ் சூறாவளி
அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா மாகாணங்களில் சூறாவளி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று இசையாஸ் சூறாவளி புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இதனால் தென் கிழக்கு முழுவதும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் ஏற்பட்டது.
புளோரிடா பான்ஹேண்டில் பகுதியில் உள்ள ஹொட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளையும், முகப்புகளையும் இந்த சூறாவளி பெயர்த்து எறிந்தது.

நான்கு பேர் பலி
அதேபோல் அலபாமாவிலும் வீடுகளின் மீது மரங்கள் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
புளோரிடாவின் எஸ்காம்பியா கவுண்டியில், ஒரு பெண்ணின் வீட்டின் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்ததாகவும், தனது வாகனக் கொட்டகையில் இயங்கிக் கொண்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு புகையால் ஒரு ஆண் உயிரிழந்ததாகவும் ஷெரிஃப் சிப் சிம்மன்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், வெள்ளம் அப்பலாச்சியன் மலைத்தொடர் வரை பரவக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
