அமெரிக்க எண்ணெய் உற்பத்திக்கு கடும் அச்சுறுத்தல்... உக்கிரமடையும் இசாயாஸ் புயல்

Weather
By Arbin Oct 08, 2026 04:16 AM GMT
Report

Isaias Poses Risk to US Energy Output: இசாயாஸ் புயல் அமெரிக்காவின் எரிசக்தி உற்பத்திக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த ஆண்டின் முதல் அட்லாண்டிக் சூறாவளி வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் வளைகுடா கடற்கரைப் பகுதியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முக்கிய எண்ணெய் தளங்கள்

குறித்த புயலானது கடும் சேதத்தை விளைவிக்கும் காற்று, வெள்ளப்பெருக்கு மற்றும் எரிசக்தி உற்பத்தியில் ஏற்படக்கூடிய இடையூறுகள் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அமெரிக்க எண்ணெய் உற்பத்திக்கு கடும் அச்சுறுத்தல்... உக்கிரமடையும் இசாயாஸ் புயல் | Isaias Poses Risk To Us Energy

இசாயாஸ் (Isaias) வெப்பமண்டலப் புயலானது, மணிக்கு 110 மைல் வேகத்திலான காற்றுடன் கூடிய வலிமையான 'வகை 2' (Category 2) சூறாவளியாக வரும் நாட்களில் வலுவடையும் என்று அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்தப்புயல் லூசியானா மற்றும் டெக்சாஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள முக்கிய எண்ணெய் தளங்கள் மற்றும் இயற்கை எரிவாயு குழாய்ப் பாதைகளுக்கு வெகு தொலைவில் கிழக்குப் பகுதியாகச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பரவும் நிமோனிக் பிளேக் நோய்... தனிமைப்படுத்தல்களைத் தொடங்கிய ரஷ்யா

பரவும் நிமோனிக் பிளேக் நோய்... தனிமைப்படுத்தல்களைத் தொடங்கிய ரஷ்யா

அந்தப் பாதையானது, செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட புதிய புயல் மாதிரிகளின் வழிகாட்டுதல்களைப் பகுதியளவு அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், பொதுவாக இயற்பியல் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மரபுசார் மாதிரிகள், இந்தப் புயல் கிழக்கு லூசியானாவை நோக்கி நகர்வதைக் காட்டியுள்ளன. அந்தப் பாதையில் சென்றால், புயலானது நியூ ஆர்லியன்ஸ் அருகே உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு மிக அருகில் பயணிக்கக் கூடும்.

அமெரிக்க எண்ணெய் உற்பத்திக்கு கடும் அச்சுறுத்தல்... உக்கிரமடையும் இசாயாஸ் புயல் | Isaias Poses Risk To Us Energy

இசாயாஸ் புயல் வலுவிழப்பதற்கு முன்பு, அதன் தாக்கங்கள் கிழக்கே புளோரிடாவின் பென்சகோலா மற்றும் மேற்கு புளோரிடா பாண்டில் பகுதியில் உள்ள எக்லின் விமானப்படைத் தளம் வரை பரவக்கூடும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அப்படி நடந்தால், ஏற்படக்கூடிய சேதங்களும் பொருளாதாரத் தாக்கங்களும் 6 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

மேலும், அடுத்த ஓரிரு நாட்களில் இந்தப்புயல் மிக வேகமாகத் தீவிரமடையக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எண்ணெய் சந்தைகள் ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தில் சிக்கியுள்ள சூழலில் இசாயாஸ் புயல் வலுவடைந்து வருகிறது.

மெக்சிகோ வளைகுடா

ஈரான் போரினால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில், லொறிகள், ரயில்கள், தொழிற்சாலைகள் மற்றும் வெப்பமூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருளான டீசல் உற்பத்தியில் ஏற்படும் தடங்கல்களைத் தாங்கிக்கொள்ளப் போதுமான சூழல் இல்லை.

அமெரிக்க எண்ணெய் உற்பத்திக்கு கடும் அச்சுறுத்தல்... உக்கிரமடையும் இசாயாஸ் புயல் | Isaias Poses Risk To Us Energy

புயலின் பாதை மேற்கு நோக்கி மாறினால், கடற்பகுதி உற்பத்தி மற்றும் வளைகுடா கடற்கரை எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் புயலின் பாதையில் சிக்கக்கூடும். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை நிலவரப்படி, மிசிசிப்பி முதல் புளோரிடா வரை சூறாவளி மற்றும் கடல் நீர்மட்ட உயர்வு (storm surge) குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

அதிக அலைகளுடன் சேர்ந்து, 7 அடி உயரம் வரையிலான நீர் நிலப்பகுதியை நோக்கி ஊடுருவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவ்ரான் நிறுவனம் மெக்சிகோ வளைகுடாவில் உள்ள தனது தளங்களிலிருந்து அவசியமற்ற பணியாளர்களை வெளியேற்றி வருகிறது.

தற்போதைய நிலையில் உற்பத்தி அல்லது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, புயலுக்கு முன்னதாக வளைகுடா எண்ணெய் உற்பத்தியில் சுமார் 9.24 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 3.36 சதவீதமும் நிறுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்க எண்ணெய் உற்பத்திக்கு கடும் அச்சுறுத்தல்... உக்கிரமடையும் இசாயாஸ் புயல் | Isaias Poses Risk To Us Energy

புளோரிடா பான்ஹேண்டில் (Florida Panhandle), தெற்கு அலபாமா மற்றும் மிசிசிப்பி ஆகிய பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய காற்று வீசுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் பலத்த மழை பரவலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆங்காங்கே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.

புதன்கிழமை காலை, மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து தெற்கு-தென்மேற்கே 540 மைல் தொலைவில் இசாயாஸ் புயல் அமைந்திருந்தது.

வியாழக்கிழமைக்குள் இது அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளியாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; பொதுவாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில்தான் இத்தகைய நிலை எட்டப்படுவது வழக்கம்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US