பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து பேசாததற்கு இது தான் காரணம்! பாடகி இசைவாணி உருக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி இசைவாணி முதன் முறையாக தனது திருமணத்தை குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5 சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இசைவாணி தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை பற்றி பேசியது மட்டுமில்லாமல் தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.
ஆனால் சமீபத்தில் இதுபற்றி இசைவாணி பேசி உள்ளார். இசை வாணிக்கு கர்நாடக பாடகர் ஸ்ரீகாந்த் தேவா உடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இசைவாணி தான் திருமணத்தை மறக்க வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே இதை மறைத்தேன். ஏனென்றால் அதை ஞாபகப்படுத்தவும், நினைவூட்டவும் எனக்கு விருப்பமில்லை ஆகையால் தான் அதைப் பற்றி நான் பேசவில்லை என்று கூறியுள்ளார்.