அம்பானி வாரிசுகளுக்கு முக்கிய பொறுப்பு; ரிலையன்ஸ் வாரியத்திலிருந்து நீதா அம்பானி ராஜினாமா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவாக இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை நியமிப்பதற்கு திங்கள்கிழமை நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் குழுவில் இருந்து விலகி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக நீடிக்கவுள்ளார்.
இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய RIL AGM 2023 கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் 150 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது, இது இந்தியாவில் உள்ள மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களை விட அதிகம். ரிலையன்ஸ் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 9,74,864 கோடிகள், இந்த நிதியாண்டில் வட்டி, வரிகள், தேய்மானம், கடன்தொகைக்கு முந்தைய வருவாய் ரூ. 1,53,920 கோடிகள், நிகர லாபம் ரூ. 73,670 கோடி என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மனிதவள, நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெற்ற பின், அந்தந்த பொறுப்புகளை ஏற்பார்கள் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மறுபுறம், முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி வாரியத்தில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் அவர் தொடர்ந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருப்பார் மற்றும் நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்துவார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின் மூலம் முகேஷ் அம்பானி தனது வாரிசுகளிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வாய்ப்புகள் இருப்பதாக வணிக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் இயக்குநராக இஷா அம்பானி நியமிக்கப்பட்டார். அவர் ஜியோ நிதிச் சேவைகள் குழுவில் நிர்வாகமற்ற இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இளைய மகன் ஆனந்த் தற்போது ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி, ஆகிய நிறுவனங்களில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஈஷா அம்பானி கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Next generation at Reliance, Isha Ambani, Akash Ambani, Anant Ambani, Nita Ambani steps down, Mukesh Ambani, Reliance Industries