கிறிஸ்துமஸ் பரிசாக 8.2 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனம்: ஈஷா அம்பானிக்கு gift கிடைக்குமா!
சுமார் 8 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை ஈஷா அம்பானி கிறிஸ்துமஸ் பரிசாக பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைப்பு
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளை நிறுவனங்களை அவருடைய மனைவி, மகன்கள் மற்றும் மகள் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை முகேஷ் அம்பானி தன்னுடைய மகள் ஈஷா அம்பானியிடம் வழங்கினார்.
தற்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 8.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அதன் ஆன்லைன் பேஷன் வர்த்தக தளமான Ajio தற்போது லாபகரமான நிலைக்கு முன்னேறி உள்ளது.
Ajio நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் முதல் லாபகரமான ஆன்லைன் முதலீடு ஆகும். மிந்த்ரா நிறுவனத்தின் ஆதிக்கத்தை பெறுவதற்காக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட Ajio நிறுவனம் தொடங்கப்பட்டது.
தற்போது Ajio நிறுவனத்தின் வருடாந்திரம் 2 பில்லியன் டொலர் மொத்த விற்பனை பதிவு செய்து வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தற்போது Ajio நிறுவனத்துடன் கை கோர்த்து இருப்பதாக ஈஷா அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 3,300 கடைகளை திறந்து உள்ளது, அதில் சுமார் 78 கோடி காலடி தடங்களும், 100 கோடி அளவிலான பண பரிவர்த்தனையும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தை லாபகரமாக ஈஷா அம்பானி மாற்றியதை தொடர்ந்து, 8 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை ஈஷா அம்பானி கிறிஸ்துமஸ் பரிசாக பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mukesh Ambani, Reliance Retail, Isha Ambani, Akash Ambani, Anant Ambani, Ajio, Reliance Industries, Myntra, jio, Reliance, 100 crore transactions
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |