ஈஷா அம்பானியின் வலது கை யார்? அவரின் ஆண்டு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா!
ஈஷா அம்பானியின் 8.3 லட்சம் கோடி நிறுவனத்தை இயக்குவதில் அவரது வலது கையாக செயல்படும் தர்ஷன் மெஹ்தாவின் பங்கு மிகப்பெரியது.
ஈஷா அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) மகள் ஈஷா அம்பானி(Isha Ambani), தொழில் துறையில் பெரும் சாதனை புரிந்து வருகிறார்.
8.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள Reliance Retail நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவருக்கு, பலம்மிக்க குழு ஒன்று இருக்கிறது.
இந்தக் குழுவில் முக்கிய பங்கு வகிப்பவர் தர்ஷன் மெஹ்தா(Darshan Mehta ), இவர் பெரும்பாலும் ஈஷா அம்பானியின் வலது கை என்று அழைக்கப்படுகிறார்.
தர்ஷன் மெஹ்தா
2007ம் ஆண்டு Reliance உருவாக்கப்பட்ட போது தர்ஷன் மெஹ்தா அதன் முதல் ஊழியராக சேர்க்கப்பட்டார்.
தர்ஷன் மெஹ்தா தற்போது ரிலையன்ஸ் பிராண்டுகளின் தலைவர்(president) மட்டும் MD ஆக உள்ளார்.
Tommy Hilfiger, Gant, மற்றும் Nautica போன்ற பிரபல உலகளாவிய பிராண்டுகளை இந்திய சந்தைக்குக் கொண்டு வருவதில் இவர் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.
மேலும், ஒரே ஆண்டில் 3300 கடைகளை சேர்த்த ரிலையன்ஸ் ரீடெய்லின் விரிவாக்கத்தில் அவரது குறிப்பிடத்தக்க பங்கும் குறிப்பிடத்தக்கது.
மெஹ்தாவின் வருட சம்பளம் அவரது முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன, 2020-21 நிதிய ஆண்டுக்கான புள்ளி விவரங்களின் படி மட்டும் அவரது ஆண்டு சம்பளம் சுமார் 4.89 கோடி ரூபாயாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Isha Ambani,
Darshan Mehta,
Reliance Retail,
Reliance Brands,
Business Head - Reliance Brands,
Isha Ambani's right hand,
Darshan Mehta salary,
Reliance Retail expansion,
Tommy Hilfiger India,
Gant India,
Nautica India,