ஈஷா அம்பானியுடன் கைகோர்க்கும் தீபிகா படுகோன்! கையெழுத்தான புதிய வணிக ஒப்பந்தம்
ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரபல நடிகை தீபிகா படுகோனின் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஈஷா அம்பானி-தீபிகா படுகோன் ஒப்பந்தம்
ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல், இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனின் அழகு சாதனப் பொருள் பிராண்ட் 82°E உடன் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தீபிகா படுகோனின் 82°E நிறுவனத்தின் தயாரிப்புகள் முதல் முறையாக ரிலையன்ஸ் ரீடெய்லின் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.
டிரா (Tira) வளர்ச்சியில் இணைகிறது 82°E
இந்த ஒப்பந்தம், ஈஷா அம்பானியின் தலைமையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தொடர்ந்து விரிவடைந்து வருவதைக் குறிக்கிறது.
கடந்த ஆண்டு பல முன்னணி பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் ரீடெய்ல், தற்போது ரூ.8,20,000 கோடி மதிப்புடைய நிறுவனமாக உள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், தீபிகா படுகோனின் சுய கவனிப்பு பிராண்ட் 82°E பரவலான சந்தை கிடைக்கும். ஈஷா அம்பானி இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் அணுகக்கூடிய மற்றும் உயர்தர அழகு சாதனப் பொருட்களை வழங்குவதற்கான டிராவின் (Tira) பார்வையை முன்னோக்கிச் செல்கிறது" என்று கூறினார்.
மேலும், இந்த ஒப்பந்தம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரீமியம் சரும பராமரிப்பு தயாரிப்புகளை அணுகுவதற்கான வசதியை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரா (Tira) Nykaa, Tata Cliq Palette, Myntra போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் ஒரு ஆன்லைன் அழகு சாதனப் பொருள் தளமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |