24 மணி நேரமும் ஷாப்பிங்! ஈஷா அம்பானி கைப்பற்றும் புதிய நிறுவனம்?
ரிலையன்ஸ் ரீடெய்ல் 24Seven கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஈஷா அம்பானியின் புதிய திட்டம்
ஈஷா அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ரீடெய்ல்(Reliance Retail), Godfrey Phillips நிறுவனத்திடம் இருந்து 24Seven கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ்(convenience store) சங்கிலியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் மளிகை சில்லறை துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இருப்பு மேலும் விரிவடையும்.
24 மணி நேரமும் செயல்படும் தனது கடைகளுக்கு பெயர் பெற்ற 24Seven, மளிகைப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், சிற்றுண்டிகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை வழங்குகிறது.
தற்போது இந்த சங்கிலி டெல்லி-என்சிஆர், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சுமார் 145 கடைகளை இயக்கி வருகிறது.
ரிலையன்ஸ் ரீடெய்லை வலுசேர்க்கும் ஒப்பந்தம்
இந்த கையகப்படுத்துதல், ரிலையன்ஸ் ரீடெய்லின் கன்வீனியன்ஸ் ஸ்டோர் பிரிவில் மேலும் வலு சேர்க்கும்.
ஏற்கனவே இந்த பிரிவில், 7-Eleven என்ற மற்றொரு பெரிய கன்வீனியன்ஸ் ஸ்டோர் சங்கிலியின் மாஸ்டர் franchise-ஆக உள்ள ரிலையன்ஸ், இந்தியாவில் சுமார் 50 கடைகளை இயக்கி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் வெற்றி, ரிலையன்ஸ் மற்றும் கோட்ஃப்ரி பிலிப்ஸ் இடையே இணக்கமான மதிப்பீட்டை எட்டுவதை பொறுத்தே இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Isha Ambani with Mukesh Ambani, Isha Ambani's Reliance Retail to Buy 24Seven, 24Seven, 7-Eleven