IVF மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.., சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட இஷா அம்பானி
இஷா அம்பானி தனது இரட்டையர்கள் IVF மூலம் பிறந்ததாக பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகளும் தொழிலதிபருமான இஷா அம்பானி பிரமல், இரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) பயன்படுத்துவது பற்றி ஒருமுறை மனம் திறந்து பேசினார்.
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த செயற்கை கருவூட்டல் (ART) செயல்முறை பற்றிய உரையாடலை இயல்பாக்குகிறார் இஷா அம்பானி.
வோக் இந்தியாவுக்கு அளித்த ஒரு புதிய நேர்காணலில் பேசிய இஷா அம்பானி, "எனது இரட்டையர்கள் IVF மூலம் கருத்தரிக்கப்பட்டார்கள். நாங்கள் அதை இயல்பாக்குவோம். இதற்கு யாரும் வெட்கப்பட கூடாது. இது ஒரு கடினமான செயல்முறை. இதற்கு நீங்கள் உடல் ரீதியாக சோர்வடைகிறீர்கள்" என்றார்.
மேலும், இன்றைய உலகில் நவீன தொழில்நுட்பம் இருந்தால், குழந்தைகளைப் பெறுவதற்கு அதைப் பயன்படுத்தலாம்.மறைக்க வேண்டியது ஒன்றுமில்லை என்கிறார் இஷா அம்பானி.
தொழிலதிபர் ஆனந்த் பிரமலை மணந்த இஷாவுக்கு, மகன் கிருஷ்ணா மற்றும் மகள் ஆதியாசக்தி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பெண்கள் கடினமான கருவுறுதல் சவால்களை எதிர்கொண்டு வரும் இன்றைய காலகட்டத்தில், ART-யின் நன்மைகளைப் பற்றி இஷா அம்பானி ஆர்வத்துடன் பேசுகிறார்.
இந்தியாவில் மட்டும், ஆண்டுதோறும் 250,000–300,000 இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |