IPL ஏலத்தில் அதிக விலைபோன இந்திய வீரர்: வரலாறு படைத்தார் இஷான் கிஷான்!
IPL ஏலத்தில் இந்திய வீரர்களில் யுவராஜ் சிங்க்கு அடுத்தபடியாக அதிக தொகை கொடுத்து இந்திய வீரர் இஷான் கிஷான் 15.25 கோடிக்கு மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷான் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து இருந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷான் இந்த ஆண்டிற்கான IPL ஏலத்தில் அதிக விலை போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் 15.25 கோடிக்கு மீண்டும் எடுத்துள்ளது.
??? ?????? ?????? shares a message for the Paltan after coming ℍ??? ?#AalaRe #MumbaiIndians #AalaRe #IPLAuction @ishankishan51 pic.twitter.com/Q9QcTQ34gL
— Mumbai Indians (@mipaltan) February 12, 2022
இந்த நிலையில் IPL ஏலத்தின் வரலாற்றிலேயே இந்திய வீரர்கள் பட்டியல் யுவராஜ் சிங்கிற்கு(16 கோடி) பிறகு அதிக விலைபோன இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷான் பெற்றுள்ளார்.
ஏலத்தின் தொடக்கத்தில் இருந்தே 10 கோடிக்கு மேல் எந்த வீரர்களையும் வாங்காமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இஷான் கிஷானை சுமார் 15.25 கோடி செலவு செய்து வாங்கியுள்ளது.
இஷான் கிஷானை எடுப்பதற்கு கடுமையாக போராடிய பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் அணிகள் ஏலத்தில் இருந்து விலகி கொண்டதை தொடர்ந்து இஷான் கிஷானை தங்கள் அணியில் மும்பை அணி மீண்டும் இணைத்துள்ளது.
We're sure you loved that bid @mipaltan ??
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
Welcome back to the Paltan @ishankishan51 pic.twitter.com/xwTbSi9z7b