துலீப் இறுதிப்போட்டியில் இரட்டைசதம் அடித்த இஷான் கிஷன்
Ishan Kishan double century in duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார்.
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் அதிரடியாக இரட்டை சதம் விளாசினார்.
குமார் குஷாக்ரா
கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடங்கிய கிழக்கு மண்டல அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
வைபவ் சூர்யவன்ஷி 44 ஓட்டங்களும், அபிமன்யு ஈஸ்வரன் 72 ஓட்டங்களும், ஷிகார் மோகன் 85 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இஷான் கிஷன் இரட்டை சதம்
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய குமார் குஷாக்ரா 132 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) இரட்டை சதம் அடித்தார்.
மொத்தம் 301 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 7 சிக்ஸர்கள், 27 பவுண்டரிகளுடன் 250 ஓட்டங்கள் விளாசினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |