அதிவேக இரட்டை சதம்., ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீரர்!
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையை படைத்துள்ளார்.
இஷான் கிஷன் சாதனை
இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஓட்டங்கள் எடுத்த 7வது சர்வதேச மற்றும் 4வது இந்திய துடுப்பாட்டக்காரர் ஆனார்.
2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெயிலின் உலக சாதனையை கிஷன் முறியடித்தார்.
இந்திய பேட்டிங் வரிசையில் இஷான் கிஷன் நிரந்தரமானவர் அல்ல, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் மட்டுமே இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார்.
கிஷனுக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். கிஷானுக்கு முன்னதாக ஃபகார் ஜமான், கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்டில் ஆகியோர் இரட்டை சதங்களை அடித்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் மற்றோரு சாதனையும் முறியடுக்கப்பட்டது.
கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 72-வது சதத்தை அடித்து அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் 71 சதங்கள் என்ற சாதனையை முறியடித்தார். 100 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதத்துடன் தற்போது விராட் கோலி மட்டுமே உள்ளார்.
கோஹ்லியின் அபாரமான ஆட்டத்தை கிரிக்கெட் சமூகமும் பாராட்டியுள்ளது.