ஹைதராபாத்தை அடித்து துவைத்த இஷான் கிஷான்! 16 பந்தில் 50: பீதியில் கொல்கத்தா
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், மும்பை அணியின் துவக்க வீரர் இஷான் கிஷான் 16 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி விளையாடி வருகின்றன.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மும்பை அணி இப்போட்டியில் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதன் படி டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடி வரும் மும்பை அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 5 ஓவர் முடிவில் 78 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இதில் துவக்க வீரர் இஷான் கிஷான் 16 பந்தில் 50 ஓட்டங்கள் குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹைதராபாத் அணி குறைந்த ஓட்டத்தில் சுருட்டிவிட்டால், அது நமக்கு சாதகமாகிவிடும் என்று கொல்கத்தா அணி இருக்கும் நிலையில், இஷான் கிஷனின் இந்த அதிரடி ஆட்டம் அவர்களுக்கு ஒரு வீத பீதியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது,