நியூசிலாந்து வீரர்களை சிதறவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்: அதிரடி சதம் விளாசிய இஷான் கிஷன்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் தனது அதிரடி சதத்தை இஷான் கிஷான் பதிவு செய்துள்ளார்.
5வது டி20 போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்களிலும், அபிஷேக் சர்மா 30 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
தன்னுடைய சொந்த மண்ணில் முதல் சர்வதேச போட்டியை விளையாடும் சஞ்சு சாம்சன், சொற்ப ஓட்டங்களில் வெளியேறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சதம் விளாசிய இஷான் கிஷன்
இதையடுத்து களத்தில் இணைந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் ஜோடி நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் விளாசி 103 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
Maiden T20I HUNDRED! 💯
— BCCI (@BCCI) January 31, 2026
Ishan Kishan gets there with a MAXIMUM 🥳
He also completes 1000 T20I runs 🔥
Updates ▶️ https://t.co/AwZfWUTBGi#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/sxtzixQIYq
மறுமுனையில் சூர்யகுமார் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 63 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி நேர அதிரடியை காட்டிய பாண்டியா 17 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் குவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |