டோனிக்கு ஸ்லிப் நிற்க பயந்து நடுங்கிய இஷான் கிஷன்! வெளியான வீடியோ: டிரண்டாக்கும் CSK ரசிகர்கள்
சென்னை அணிக்கெதிரான போட்டியில் டோனி பேட்டிங் செய்ய வந்த போது, இஷான் கிஷான் அருகில் பீல்டிங் நிற்க பயந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில், சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோனி வெறும் 5 ஓட்டங்கள் எடுத்து பவுலியன் திரும்பினார்.
— Sunny Singh (@SunnySi40932868) September 20, 2021
இந்நிலையில், இப்போட்டியின் போது, டோனி பேட்டிங் ஆட வந்த போது, அப்போது டிரண்ட் போல்ட் பந்து வீச தயாராகினார். டோனிக்கு பவுன்சர் போடும் திட்டம் இருந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டரான இஷான்கிஷான் அருகில் நிற்கும் படி கூறப்பட்டது.
அப்போது டோனிக்கு அருகில் வந்த இஷான் கிஷான், இவர் அந்த பவுன்சர் பந்தை எப்படி அடிப்பார் என்பது போல் செய்து காட்டி, கொஞ்சம் பயந்து விலகியே நின்றார். அது தொடர்பான விடியோ காட்சி வெளியானதால், இதை சென்னை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.