ரோஹித்தை எதிர்த்து தானே சிக்கலில் மாட்டிய இஷான் கிஷன்.., ஓப்பனாக உடைத்த ராகுல் டிராவிட்
கடந்த இரு நாட்களாக பேசு பொருளாக ஆகி இருக்கும் இஷான் கிஷன் குறித்து அணிக்குள் வருவது எங்கள் முடிவு என டிராவிட் கூறியுள்ளார்.
இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதில் அவரை வேண்டுமென்று ஒதுக்கி வைக்கப்படுவதாக பேசப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக இஷான் கிஷன் மாற்று வீரராக இருந்து வந்தார். மற்ற வீரர்கள் ஓய்வில் இருக்கும் போதும், காயத்தில் இருக்கும் போதும் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது தனக்கு டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்காது என்று மனசோர்வில் அணியில் இருந்து அவர் விலகினார்.
இந்த விவகாரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவை எதிர்த்து இஷான் கிஷன் நடந்து கொண்டதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பில் டிராவிட்
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா, அதனால் தான் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம் பெறவில்லையா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிராவிட், "இஷான் கிஷன் தான் அணியில் ஆட தயார் என கூறவில்லை. அவர் இன்னும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். வெளியில் செல்வது உங்கள் முடிவு. அணிக்குள் வருவது எங்கள் முடிவு." என்றார்.
இதற்கு என்ன அர்த்தம் என்றால் அணியில் இருந்து வெளியேறுவது அவர் விருப்பம். ஆனால், மீண்டும் அவர் அணிக்கு வர வேண்டும் என்றால் நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதாகும். அணியின் உள்விவகாரத்தை டிராவிட் இப்படி பொது வெளியில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ராகுல் டிராவிட் பேசி இரண்டு நாட்கள் ஆன பின்னரும் இஷான் கிஷன் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |