ஒழுங்கா பந்தை போடு! களத்தில் மோதி கொண்ட இஷான் கிஷன் - சாம்சி... வைரலாகும் வீடியோ
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டியின் போது இஷான் கிஷன் - சாம்சி இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 179/5 ரன்களை சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம் ஓபனர்கள்தான். ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் முதல் அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில், இஷான் கிஷன் 35 பந்துகளில் 54 ரன்களை குவித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 9ஆவது ஓவரை வீச வந்த ஸ்பின்னர் சாம்சிக்கும், இஷான் கிஷனுக்கும் இடையில் களத்தில் மோதல் ஏற்பட்டது. அந்த ஓவரின் 4ஆவது பந்தில் இஷான் கிஷன் சிறப்பான முறையில் சிக்ஸர் அடித்ததால், சாம்சி சோகத்துடன் காணப்பட்டார்.
— Guess Karo (@KuchNahiUkhada) June 14, 2022
இந்த பதற்றம் காரணமாக அடுத்த பந்தை சாம்சி புல் டாஸாக வீசிய நிலையில், இஷான் அதனையும் ஓங்கி அடித்தார். பவுண்டரி லைன் பீல்டரால் தடுக்கப்பட்டது.
அப்போது இஷான் கிஷனிடம் வந்த சாம்சி, ஏதோ சொல்ல கோபத்தில் இஷான் கிஷன், போ, போ ஒழுங்கா பந்தபோடு என்ற தோரணையில் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரையும் ஸ்பின்னர் வீசி வந்த நிலையில், மகாராஜிற்கு எதிராக இஷான் கிஷன் 4,6,4 என பந்துகளை பறக்கவிட்டார்.
இப்போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.