உத்தரவுகளை மீறிவரும் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான்., BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கம்
இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சிப் போட்டிகளில் விளையாடவேண்டும் என்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்க பிசிசிஐ யோசித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ ஏற்கனவே 2023-24க்கான ஒப்பந்தப் பட்டியலைத் தயாரித்துவிட்டதாகவும், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை விலக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் தற்போது தேசிய அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் ரஞ்சி விளையாடாமல் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார் என்பது தெரிந்ததே.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
பெங்களூரில் நடந்த மறுவாழ்வு முகாமில் கலந்து கொண்ட அவர், முதுகுவலி காரணமாக வெள்ளிக்கிழமை தொடங்கும் ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ishan Kishan, Shreyas Iyer , BCCI central contract, Ranji Trophy warning