76 ரன் வாரிவழங்கிய ஆர்ச்சர்! தனியாக சம்பவம் செய்த இஷான் கிஷன்..286 ரன் குவித்த SRH (வீடியோ)

Sivaraj
in கிரிக்கெட்Report this article
ஐபிஎல் 2025யில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 286 ஓட்டங்கள் குவித்துள்ளது.
கிஷன் சரவெடி
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி SRH அணியில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் சரவெடி ஆட்டத்தை தொடங்கினர்.
அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தீக்ஷணா ஓவரில் அவுட் ஆனார். அடுத்த வந்த இஷான் கிஷன் சிக்ஸர் மழை பொழிந்தார்.
𝙄.𝘾.𝙔.𝙈.𝙄 🔥
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
Ishan Kishan dealt in sixes on his way to a magnificent maiden #TATAIPL 💯 😮 👊
Updates ▶ https://t.co/ltVZAvHPP8#SRHvRR | @SunRisers | @ishankishan51 pic.twitter.com/9PjtQK231J
கிஷன், ஹெட் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆட, அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்தக் கூட்டணி 38 பந்துகளில் 85 ஓட்டங்கள் குவித்தது.
SRH 286
ஹெட் 31 பந்துகளில் 67 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதிஷ் குமார் 15 பந்துகளில் 30 ஓட்டங்களும், கிளாசென் 14 பந்துகளில் 34 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
கடைசிவரை களத்தில் நின்ற இஷான் கிஷன் 47 பந்துகளில் 6 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாசினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ஓட்டங்கள் குவித்துள்ளது. துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும், தீக்ஷணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |