‘ரிஷப் பண்ட் எல்லாம் எனக்கு போட்டியே இல்ல’ - பிரபல இந்திய வீரர் கருத்து
ரிஷப் பண்ட் உடனான உறவு குறித்து சக இந்திய அணி வீரர் இஷான் கிஷன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 விதமான போட்டித் தொடர்களிலும் ரிஷப் பண்ட் கேப்டனாக உள்ளார். இதனிடையே சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இளம் வீரர் இஷான் கிஷன் பேக்-அப் ஓப்பனராகவும் விக்கெட் கீப்பராகவும் கருதப்படுகிறார்.
இந்நிலையில் பண்ட்டை போட்டியாளராக நான் பார்க்கவில்லை என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் மிகவும் நல்ல நண்பர்கள் என்றும், கிரிக்கெட்டில் எப்படி முன்னேறலாம் என்பதை பற்றி விவாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு விக்கெட் கீப்பிங் மிகவும் பிடிக்கும் அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னால் முடிந்ததை அணிக்கு கொடுக்க முயற்சிப்பேன் எனவும் இஷான் கிஷன் தெரிவித்துள்ளதால் விரைவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.