டோனி பேட்டிங் செய்த போது அவுட் என கிண்டல் செய்த இஷான்! வைரலாகும் புகைப்படம்: கடும் கோபத்தில் CSK ரசிகர்கள்
சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷானின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஐபில் தொடர் இன்று கோலகலமாக துவங்கியது.
அதன் படி இன்று துவங்கிய போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் சென்னை அணி சற்று முன் வரை 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இப்போட்டியில் சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோனி வெறும் 3 ஓட்டங்களில் ஆடம் மைல்ன் பந்து வீச்சில் டிரண்ட் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
இந்நிலையில், டோனி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அருகில் பீல்டிங் நின்று கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷான் அவுட் என்பது போல் செய்கை செய்கை செய்தார்.
அந்த புகைப்படத்தை மும்பை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.