அவுட்டாக்கிய பின்பு சஹால் செய்த செயல்! மதிக்காமல் அப்படியே சென்ற இஷான் கிஷான்: வெளியான வீடியோ
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், இஷான் கிஷானை அவுட்டாக்கிய பின்பு, சஹால் செய்த செயலின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோலியின் பெங்களூரு மற்றும் ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனை, பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சஹால் தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கினார்.
— Simran (@CowCorner9) September 26, 2021
எப்போதுமே அடித்து ஆட துடிக்கும் இஷான் கிஷான், இந்த முறையும் சுழற்பந்து வீச்சை அடித்து ஆட முற்பட்டு அவுட் ஆகினார்.
அவர் அவுட் ஆகி வெளியேறிய போது, இஷான் கிஷனை எச்சரிக்கும் வகையில் கைகளை நீட்டி ஏதோ பேசினார். ஆனால், இஷான் கிஷான் அதை மதிக்காமல் அப்படியே சென்றார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.