இந்திய ரசிகர்களுக்கு துவக்கமே காத்திருந்த அதிர்ச்சி! நியூசிலாந்து அணியே எதிர்பார்க்காத டுவிஸ்ட்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இரண்டு இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ள இந்தியா-நியூசிலாந்து இரு அணிகளும் இன்று அக்டோபர் 31 மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி குரூப் 2-வில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு இருக்கிறது.
துபாயில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இரண்டாவது பாதியில் பனி முக்கிய விடயமாக இருக்கும் என்பதால் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தேன் என கூறினார்.
அதேபோல், நியூசிலாந்து பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, Tim Seifert-க்கு பதிலாக ஆடம் மில்னே விளையாடுகிறார் என வில்லியம்சன் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய இந்திய அணித்தலைவர் கோலி, இரண்டாவது பாதியில் பனி ஒரு முக்கிய விடயம் தான், ஆனால் முதல் போட்டியில் கிடைத்த அனுபவத்தின் மூலம் ஆரம்ப விக்கெட்டுகளை விடாமல் கூடுதல் ரன்களை சேர்ப்போம் என கூறினார்.
மேலும், இந்திய பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் இருப்பதாகவும், சூரியகுமார், புவனேஷ்வருக்கு பதிலாக இஷான் கிஷான் மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேசமயம், ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷான், கே.எல்.ராகுலுடன் இந்திய அணியின் ஆரம்ப பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என கோலி உறுதிப்படுத்தினார்.
ஹிட்மேன் ரோகித் சர்மா ஆரம்ப ஆட்டகாரராக களமிறங்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.