2வது டெஸ்டிலிருந்து ஜடேஜா விலகல்! நியூசிலாந்து அணிக்கும் பெரிய இழப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய நட்சத்திர வீரர்களான ரகானே, ஜடேஜா மற்றும் இஷாந்த சர்மா ஆகியோர் விலகியுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்தியாவிடம் ஒயிட் வாஷ் ஆனது.
இதைத்தொடர்ந்து கான்பூரில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டிசம்பர் 3ம் திகதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
ஆடுகளம் ஈரமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டாஸ் 11:30 மணிக்கு போடப்பட்டு போட்டி 12 மணிக்கு தொடங்கும் எனவும், முதல் நாள் 78 ஓவர்கள் போடப்படும் என பிசிசிஐ அறிவித்தள்ளது.
NEWS - Injury updates – New Zealand’s Tour of India
— BCCI (@BCCI) December 3, 2021
Ishant Sharma, Ajinkya Rahane and Ravindra Jadeja ruled out of the 2nd Test.
More details here - https://t.co/ui9RXK1Vux #INDvNZ pic.twitter.com/qdWDPp0MIz
இந்நிலையில், காயம் காரணமாக இந்திய வீரர்கள் ரகானே, ஜடேஜா மற்றும் இஷாந்த சர்மா 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரகானே, ஜடேஜா மற்றும் இஷாந்த சர்மாவுக்கு பதிலாக கோலி, சிராஜ் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் களமிற்ங்குவார்கள் எனவும், சாஹாவுக்கு பதிலாக பாரத் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனும் 2வது டெஸ்ட் போட்டியலிருந்து விலகியுள்ளார்.
வில்லியம்சனுக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் இருவரில் ஒருவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021