விஜய்யுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு கொள்ள கூடாது - ஃபத்வா பிறப்பித்த இஸ்லாமிய மத குரு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இப்தார் நிகழ்வில் விஜய்
சமீபத்தில் சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அப்பொழுதே விஜய் இப்தார் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
விஜய்க்கு எதிராக ஃபத்வா
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை எந்த இஸ்லாமியர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க கூடாது என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி ஃபத்வா பிறப்பித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஃபத்வாவில், குடிகாரர்கள், சூதாட்டக்காரர்கள், சமூக விரோதிகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது பாவமானது. அத்தகைய நபரை நம்ப வேண்டாம்.
தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். அவரிடமிருந்து தமிழக இஸ்லாமியர்கள் விலகியிருக்க வேண்டும்.
விஜய் தன்னுடைய படங்களில் இஸ்லாமியர்களை தீவிரதிகள் போல் சித்தரித்துள்ளார். அவர் வாக்குக்காக மட்டுமே இஸ்லாமியர்களை பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால் அவரின் செயல்பாடுகள் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |