228 ரன் இமாலய இலக்கு! கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வென்ற ஷதாப் கான் அணி
PSL தொடரின் 27வது போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தியது.
முல்தான் சுல்தான்ஸ்
ராவல்பிண்டியில் நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 228 ஓட்டங்கள் குவித்தது.
உஸ்மான் கான் ஆட்டமிழக்காமல் 100 (50) ஓட்டங்களும், சார்லஸ் 42 (18) ஓட்டங்களும், யாசிர் கான் 33 (16) ஓட்டங்களும் விளாசினர்.
அதன் பின்னர் இமாலய இலக்கை நோக்கி இஸ்லாமாத் யுனைடெட் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹால்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே வில்லி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
???? ??? ?????! ??#HBLPSL9 | #KhulKeKhel | #IUvMS pic.twitter.com/XMVVbwc145
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2024
அடுத்து வந்த ஆக சல்மானும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் காலின் மன்றோ, ஷதாப் கான் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. இவர்களின் அதிரடி ஆட்டத்தால் ஜெட் வேகத்தின் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
ஷதாப் கான் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார். ஷதாப் கான் - மன்றோ கூட்டணி 141 ஓட்டங்கள் குவித்தது.
காலின் மன்றோ ஆட்டநாயகன்
சிக்ஸர்களை பறக்கவிட்ட காலின் மன்றோ அரைசதம் அடித்தார். எனினும் அப்பாஸ் அப்ரிடி மிரட்டலான பந்துவீச்சினால் இஸ்லாமாபாத் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். அவரது ஓவரில் அசாம் கான் (0), பாஹீம் அஷ்ரப் (23) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
மன்றோ 40 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். இமாத் வாசிம் பவுண்டரிகளை அடுத்தடுத்து விரட்ட, இஸ்லாமாபாத் அணி வெற்றியை நெருங்கியது.
6⃣+4⃣
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2024
Ice cool from Imad Wasim to ace an incredible chase ?#HBLPSL9 | #KhulKeKhel | #IUvMS pic.twitter.com/NGLt5UB5nR
கடைசி ஓவரின் கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது, இமாத் பவுண்டரி அடித்தார். அவர் 13 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் இஸ்லாமாபாத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. காலின் மன்றோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
.@IsbUnited ARE THROUGH TO THE PLAYOFFS ?
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2024
A thrilling finish in Rawalpindi as the Sherus claim the 3️⃣rd-highest successful chase in HBL PSL history! ✨#HBLPSL9 | #KhulKeKhel | #IUvMS pic.twitter.com/pkxgK89bpC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |