இஸ்லாமிய பயங்கரவாதம் நம் மீது போரை அறிவித்துள்ளது.. ஆனால்! பிரான்ஸ் பிரதமர் பரபரப்பு உரை
இஸ்லாமிய பயங்கரவாதம் எங்கள் மீது போரை அறிவித்துள்ளது என பிரதமர் Jean Castex கூறினார்.
கடந்த வாரம் காவல் நிலையத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிர்வாக பொலிஸ் ஊழியர் Stephanie Monferme-க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் Jean Castex இவ்வாறு கூறினார்.
துனிசிய நாட்டைச் சேர்ந்த 49 வயதான நபர், 3 குழந்தைகக தாயான Stephanie Monferm-ஐ கத்தியால் குத்தி கொன்றான், பின்னர் பொலிஸார் அவனை சுட்டுக் கொன்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் Jean Castex , Stephanie Monferm ‘இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு" பலியானதாக கூறினார்.
பிரான்ஸ் காவல்துறையையும் அரசின் அதிகாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியதால் மற்றும் பிரான்சுக்கு சேவை செய்ததால் Monferme கொலை செய்யப்பட்டார்.
இஸ்லாமிய பயங்கரவாதம் நம் மீது போரை அறிவித்துள்ளது, ஆனால் அது கோழைகளின் தலைமையிலான போர்.
ஒரு கோழையால் மட்டுமே பெண்ணை மீது தாக்குதல் முடியும் என்று அவர் கூறினார்.
இதனையடுத்து, இந்நிழக்வில் மறைந்த Monferme-க்கு பிரான்சின் மிக உயர்ந்த பதக்கமான the Chevalier de La Legion d'Honneur வழங்கப்பட்டது.