ஹமாஸால் கடத்தப்பட்ட ஜேர்மன் பெண்ணின் சடலத்தை மீட்ட இஸ்ரேல்
ஹமாஸால் கடத்தப்பட்டு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட ஜேர்மன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் பெண் ஷானி லூக்கின் மரணத்தை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. அந்த பெண்ணின் உடலை ராணுவம் கண்டுபிடித்ததை ஷானியின் குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.
ஷானியின் மரணச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருப்பதாக அந்தப் பெண்ணின் சகோதரி அட்டி லூக் சமூக ஊடகங்களில் எழுதினார்.
அக்டோபர் 7-ஆம் திகதி, 23 வயதான ஷானி லூக் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். அப்பெண்ணை நிர்வாணமாக்கி லாரியில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் வெளியாகின. டிரக்கில் ஹமாஸ் குழு அந்த பெண்ணின் உடல் மீது அமர்ந்து சென்றது, அப்போது பொதுமக்கள் அவரது உடலில் எச்சில் துப்புவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாயின.
ஷானி லூக் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார். பெண் கொல்லப்பட்டதாக முன்னர் செய்திகள் வந்தன, ஆனால் இஸ்ரேல் இதை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், ஷானியின் கிரெடிட் கார்டு காஸாவில் பயன்படுத்தப்பட்டதாக அவரது வங்கியில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், அது அவரிடமிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் ஷானியின் குடும்பத்தினர் கூறினர்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஷானி லூக்கின் தாய் தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்புவதாகக் கூறியிருந்தார். ஒரு வீடியோ செய்தியில் அவரது தாயார் ரிகார்டா லூக், காசா பகுதியில் உள்ள ஒரு குடும்ப நண்பர் தனது மகள் ஹமாஸ் மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும், அவரை மீட்க ஜேர்மன் அரசாங்கத்தை விரைவாகச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Shani Louk, German woman Shani Louk, German Women Kidnapped by Hamas, German Tatoo Artist