பிரித்தானிய எம்.பிக்களை தடுத்து நுழைவுக்கு மறுத்த இஸ்ரேல்: ராஜதந்திர உறவில் பதற்றம்

United Kingdom Israel Israel-Hamas War Gaza
By Thiru Apr 06, 2025 07:49 PM GMT
Report

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்து இருப்பது ராஜதந்திர உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய எம்.பிக்கள் தடுத்து நிறுத்தும்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இஸ்ரேலுக்கு சென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் தடுத்து வைத்ததோடு, அவர்களின் நுழைவுக்கு மறுப்பு தெரிவித்து இருப்பது ராஜதந்திர உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய எம்.பிக்களை தடுத்து நுழைவுக்கு மறுத்த இஸ்ரேல்: ராஜதந்திர உறவில் பதற்றம் | Israel Denies Entry To British Mps Diplomatic Tens

பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த தொழிலாளர் கட்சி (Labour Party) எம்.பி.க்கள் யுவான் யாங் (Yuan Yang - ஏர்லி மற்றும் வூட்லி தொகுதி பிரதிநிதி) மற்றும் அப்திஸாம் முகமது (Abtisam Mohamed - ஷெஃபீல்ட் சென்ட்ரல் தொகுதி பிரதிநிதி) ஆகிய இருவருக்கும் இஸ்ரேல் நுழைவினை மறுத்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய வெளியுறவு மந்திரி டேவிட் லாமி(David Lammy) சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் "பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இத்தகைய முறையில் நடத்துவது ஏற்புடையது அல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்தில் உள்ள எனது சக ஊழியர்களிடம் நான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளேன்.

மேற்கு லண்டன் கத்திக்குத்து சம்பவம்: இரண்டு இளைஞர்கள் கைது

மேற்கு லண்டன் கத்திக்குத்து சம்பவம்: இரண்டு இளைஞர்கள் கைது

மேலும், இந்த இரவு 2 எம்.பி.க்களுடனும் நாங்கள் தொடர்பில் இருந்து அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கி வருகிறோம்," என விளக்கியுள்ளார்.

"பிரித்தானிய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு காசா பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்படுவதையும், பிணைக்கைதிகளை விடுவிப்பதையும், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தான்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய எம்.பிக்களை தடுத்து நுழைவுக்கு மறுத்த இஸ்ரேல்: ராஜதந்திர உறவில் பதற்றம் | Israel Denies Entry To British Mps Diplomatic Tens

 இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை

இஸ்ரேலிய குடிவரவு அமைச்சகம் (Israeli immigration ministry) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எம்.பி.க்கள் "பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பவும்" திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்கை நியூஸ் (Sky News) தகவலின்படி, இந்த இரு எம்.பி.க்களும் சனிக்கிழமை லுட்டனில் (Luton) இருந்து இஸ்ரேலுக்கு விமானம் மூலம் சென்றடைந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US