இஸ்ரேல்-ஹமாஸ் போர் இந்தியாவுக்கு சாதகமா? வெளிநாடுகளை நோக்கி திரும்பவுள்ள தொழில்நுட்ப நிறுவங்கள்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் ஆரம்பமானது. எதிர்வரும் நாட்களில் இந்த யுத்தம் மேலும் தீவிரமடையும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
போர் தீவிரமடைந்தால் இஸ்ரேலில் உள்ள உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை அங்கேயே முடித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
எனினும், போர் மூளும் பட்சத்தில், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனங்கள், இந்தியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக, ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த வணிகங்கள் திறமையான பகுதிகளுக்கு மாறும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஸ்ரேலில் 500 உலகளாவிய நிறுவனங்கள் உள்ளன. இதில் மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் கூகுள் போன்ற பிரபல நிறுவனங்கள் அடங்கும். விப்ரோ மற்றும் டிசிஎஸ் ஆகிய இந்திய நிறுவனங்களும் இஸ்ரேலில் வர்த்தகம் செய்கின்றன. இஸ்ரேலில் உள்ள இந்த நிறுவனங்களில் சுமார் 100,000 பேர் பணியாற்றுகின்றனர்.
உயர் தொழில்நுட்ப தொழில்கள் இஸ்ரேலில் வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இப்பகுதி போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. காசா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இது நடந்தால் பெரிய போர் தொடங்கும்.
சிப்மேக்கர் இன்டெல் இஸ்ரேலின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகும். இதன்போது, இஸ்ரேலின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார். ஊழியர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
போரால் இந்தியா-இஸ்ரேல் வர்த்தகம் பாதிக்குமா? இஸ்ரேலில் இருந்து இந்தியா எந்தப் பொருளை இறக்குமதி செய்கிறது?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel-Hamas war, Israel Tech firms may shift to India, Tata Consultancy Services, Intel, Wipro, Microsoft, Google, Everest Group