இஸ்ரேலில் கொல்லப்பட்ட பிரித்தானிய தாய்க்கும் மகள்களுக்கும் பிரியாவிடை... கண்ணீர் விட்டுக் கதறும் உறவினர்களும் நண்பர்களும்
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானிய தாய் மற்றும் மகள்களின் உடல்கள், இஸ்ரேல் கிராமம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டன.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் தோழிகளும் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகள், கல் மனதையும் கரைக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்
அக்டோபர் 7ஆம் திகதி, ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நிகழ்த்திய நிலையில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
AFP VIA GETTY IMAGES
அவர்களில் பிரித்தானியப் பெண்ணான Lianneம் ஒருவர். Lianne கொல்லப்பட்டது உறுதியான நிலையில், அவரது மகள்களான Noiya மற்றும் Yahel Sharabi ஆகியோரின் நிலை என்ன என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் தவித்துவந்த நிலையில், பிள்ளைகளும் கொல்லப்பட்ட செய்திகளும் ஒவ்வொன்றாக தொடர்ந்து கிடைத்தன. Lianneஇன் கணவர் இன்னமும் ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
BBC
உறவினர்களும் தோழிகளும் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகள்
இந்நிலையில், Lianne, Noiya மற்றும் Yahel Sharabi ஆகிய மூவரின் உடல்களும் Kfar Harif என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
REUTERS
உறவினர்கள் கதறியழுதபடி, மூவருக்கும் பிரியாவிடை கொடுத்தனர். பிள்ளைகளின் பள்ளித்தோழிகளின் கண்ணீரோ அதைவிட மனதைக் கலங்க வைத்தது.
பிள்ளைகளின் தோழிகள், கல்லறையை விட்டு வர மனமில்லாமல் அங்கேயே உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் காட்சிகளைக் கண்டால், கல் மனதும் கரைந்துபோகும்.
இந்தக் காட்சி இந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, பல கிராமங்களில் தங்கள் அன்பிற்குரியவர்களை அடக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள் மக்கள், இரு தரப்பிலும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |