இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிவாரணம்: இமெயில் அனுப்பி இணையத்தில் நடக்கும் ஒன்லைன் மோசடி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் இயங்கும் ஹமாஸ் ஆயுதப் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருவதை, தனக்கு சாதகமாக மோசடியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
போர் நிவாரணம்
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே போர் நடைபெறுவதை பயன்படுத்திக் கொண்டு, போர் நிவாரணம் கோரும் மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்களை மோசடியாளர்கள் போலியாக உருவாக்கியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வரை பணபரிமாற்றத்திற்காக 500 போலி மின்னஞ்சல்களையும், இணையதளங்களையும் மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பெர்ஸ்கி கூறியுள்ளது.
பொதுவாக உலக நாடுகளுக்கு இடையில் போர் நடைபெறும் போது, அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கான நிவாரண பொருள்களையும், உணவு பொருள்களையும், பண உதவிகளையும் செய்வது உண்டு. ஆனால், தற்போது பணமாக சேகரித்து கொடுத்தது, இன்று டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறியுள்ளது.
ஒன்லைன் மோசடிகள்
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மோசடியாளர்கள், போர் சூழலில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி கோரி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள செய்திகளை மின்னஞ்சல்களாக அனுப்புகின்றனர். இப்படி உருவாக்கியுள்ள 540 மின்னஞ்சல்களை கேஸ்பெர்ஸ்கி நிறுவனம் நீக்கியுள்ளது.
இது தொடர்பாக சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆண்ட்ரி கோவ்டன் கூறுகையில், "இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் ஸ்பேம் ஃபில்டர்களை ஏமாற்றும் வகையில் மோசடியாளர்கள் வார்த்தைகளை கையாளுகின்றனர். மேலும், எந்த முகவரியில் இருந்து மின்னஞ்சல் வருகிறது என்பது தெரியாத வகையில் போலியான இணையதளத்தை கொண்டுள்ளனர்" என்றார்.
அவர்கள் அனுப்புகின்ற மின்னஞ்சலில் நிவாரண உதவிகளை பெறுவது தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனை ஒருங்கிணைப்பவர்கள் யார் மற்றும் அவர்கள் குறித்த எந்த விவரங்களும் இடம் பெறாது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |