வாய்விட்டு சிரித்த பிரதமர் மோடி! இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன? வைரலாகும் வீடியோ
இஸ்ரேலில் நீங்கள் மிகவும் பிரபலமான மனிதர், வாருங்கள் என் கட்சியில் சேருங்கள் என்று இந்திய பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு பிரதமர் மோடி வாய்விட்டு சிரிக்க, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
செவ்வாய்கிழமை கிளாஸ்கோவில் நடந்த COP26 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டைச் (Naftali Bennett) சந்தித்தார்.
Picture: Twitter @PMOIndia
இரு தலைவர்களும் சந்தித்தபோது, மோடியிடம் "நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான மனிதர். வாருங்கள் என் கட்சியில் சேருங்கள்" என இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறினார்.
அவர் சொன்னதைக் கேட்டு "நன்றி" கூறிய இந்தியப் பிரதமர் மோடி வாய்விட்டு சிரித்துள்ளார். இரு தலைவர்களும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
ஜூன் மாதம் பென்னட் பிரதமராக பதவியேற்ற பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
Israel's PM Bennett to @narendramodi: You are the most popular man in Israel. Come and join my party pic.twitter.com/0VH4jWF9dK
— Amichai Stein (@AmichaiStein1) November 2, 2021
அப்போது பேசிய பென்னட் "நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்திய நாகரிகம், யூத நாகரிகம் ஆகிய இரண்டு தனித்துவமான நாகரிகங்களுக்கு இடையேயான ஆழமான உறவான இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மீண்டும் தொடங்கியவர் நீங்கள் தான், அது உங்கள் இதயத்திலிருந்து வந்தது என்று எனக்குத் தெரியும்" என்று மோடியிடம் கூறினார்.
Picture: Twitter @PMOIndia