ஆண்டிற்கு 400 சதவீதத்தால் சொத்தை அதிகரிக்கும் இஸ்ரேலிய பிரதமர்; அவருடைய முழு சொத்து மதிப்பு?
இஸ்ரேலின் 73 வருட வரலாற்றில் எந்த ஒரு பிரதமரை காட்டிலும் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவருடைய சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
1949 ஆம் ஆண்டு அக்டோபர் 21 திகதி பிறந்தார். இவர் ஒரு இஸ்ரேலிய அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிரான சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒரு நபராக நெதன்யாகு தன்னை அடையாளப்படுத்தி கொண்டமையால் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெற்றுக்கொண்டு இருந்தார்.
ஈரானிடமிருந்து இஸ்ரேலுக்கு வரும் ஆபத்தை நீண்ட காலமாக எச்சரித்து கொண்டே இருந்தார். இவர் 1984 ஆம் ஆண்டு ஐநாவின் தூதுவரானார். 1988 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 இல் பிரதமரானார்.1999 இல் தேர்தலில் தோற்றார். 2002 முதல் 2003 ஆம் ஆண்டுகளில் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
2003- 2005 இல் நிதியமைச்சரானார். காசா தொடர்பான பிரச்னையில் பதவியை ராஜினாமா செய்தார்.
2005 ஆம் ஆண்டில் லிகுட் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2013 ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் நான்காவது முறையாக வென்றார்.
2019 ஆம் ஆண்டில் லஞ்சம், மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாக பிரதமரானார்.
மூன்று முறை தொடர்ச்சியாக இல்லாத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக மொத்தம் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளார்.
தேச வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் அரசியலில் மட்டுமல்லாமல் கல்வியிலும் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளார்.
அதாவது MIT இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளார். கட்டிடக்கலையில் இளங்கலை மற்றும் வணிகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
ET Now அறிக்கையின்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் நிகர மதிப்பு 80 மில்லியன் டொலர்களாகும்.
caclubindia.com இன் அறிக்கையின்படி, நெதன்யாகு உலகின் பணக்கார பிரதமர்களில் ஒருவராக மாறியுள்ளார், அவரது சொத்து ஆண்டுக்கு 400% அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |