குறிவைக்கப்படும் பாலஸ்தீன கால்பந்து வீரர்கள்: வெளிவரும் பின்னணி
வரவிருக்கும் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு பாலஸ்தீன கால்பந்து அணி தயாராகும் நிலையில், கால்பந்து வீரர்களை இஸ்ரேலிய ராணுவம் குறிவைத்து வருவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் வான் தாக்குதலுக்கு
டிசம்பர் 2008ல் 19 வயதேயான பாலஸ்தீன கால்பந்து நட்சத்திரம் Hazem Alrekhawi தமது நண்பர்கள் 9 பேர்களுடன் இஸ்ரேல் வான் தாக்குதலுக்கு இலக்கானார்.
காஸா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில், Hazem Alrekhawi மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் காயங்கள் காரணமாக கால்பந்து விளையாட முடியாமல் போனது.
2011ல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் குடியேறிய Hazem Alrekhawi, இந்த கோடையில் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது Hazem Alrekhawi என்ன ஆனார் என்ற தகவல் இல்லை.
1928ல் பாலஸ்தீன கால்பந்து நிர்வாகம் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஃபிஃபா உறுப்பினராக இணைந்து கொண்டது. ஆனால் அதன் பின்னர் யூதர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்ற பாலஸ்தீன கால்பந்து, 1948ல் இஸ்ரேல் கால்பந்து கழகம் என உருமாற்றம் பெற்றது.
தகுதிச் சுற்றுக்கு தயாரக வேண்டும்
அதன் பின்னர் பாலஸ்தீன மக்கள் கால்பந்து விளையாடுவதை கைவிட்டனர். ஆனால் 1998ல் மீண்டும் பாலஸ்தீன கால்பந்து கழகம் உருவாக்கப்பட்டு, பிஃபா உறுப்பினராகவும் மாறியது.
[X9SZGD[
அதன் பின்னர் இஸ்ரேல் முன்னெடுத்த நக்பா என்ற இன அழிப்பில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேல் நாட்டை உருவாக்கும் பொருட்டு, சுமார் 750,000 பாலஸ்தீன மக்கள் வேறு பகுதிகளுக்கு துரத்தப்பட்டனர்.
அந்த நெருக்கடிகளில் இருந்தும் பாலஸ்தீன கால்பந்து தப்பியது. ஆனால் தற்போது 2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுக்கு தயாரக வேண்டும் என்பதுடன், 2024 ஜனவரியில் ஆசிய கிண்ணம் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது பாலஸ்தீன அணி.
ஆனால் பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |