பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கச் சொல்லும் பிரான்ஸுக்கு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை
பாரிஸுக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் சாஅர், பாலஸ்தீனை அங்கீகரிக்கத் திட்டமிடும் பிரான்ஸுக்கு கடும் எச்சரிக்கையுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், “பாலஸ்தீன அரசை விரைவில் அங்கீகரிக்க முடிவு செய்யலாம்” என்ற அறிவைத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர், “அந்த முடிவை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். ஆனால் அப்படி எடுக்கப்பட்டால், அது மிகவும் பாரிய தவறாக இருக்கும்.” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், “அத்தகைய முடிவுகள் பிரான்ஸின் மத்திய கிழக்கு தாக்கத்தை இழக்கச் செய்யும். இது, பாலஸ்தீன அரசை உருவாக்காது. எதிர்பார்ப்பை மட்டுமே உருவாக்கும்... அது அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் இடையூறாக அமையும்,” என அவர் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், “பிரான்ஸ் இப்படி ஒருதலைப்பட்சமாகா முடிவு எடுக்குமானால், இஸ்ரேலும் தன்னைப் பாதுகாப்பதற்காக ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுக்கும். எதிர்காலத்தில் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தையின் முடிவை யாராவது முன்கூட்டியே தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள் என்றால், நாங்களும் அதேபோல் செயல் படுவோம்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IsraelNews #FrancePolitics #PalestineStatehood #MiddleEastTensions #GideonSaar #EmmanuelMacron #GlobalDiplomacy #PeaceProcess #Geopolitics #BreakingNews