பாலஸ்தீனியர்களை அவசரமாக வெளியேற்றும் இஸ்ரேல்! கூடாரங்கள், அத்தியாவசிய பொருட்கள் எதற்கு?
தாக்குதலை தீவிரப்படுத்த பாலஸ்தீனியர்களை மாற்று இடங்களுக்கு இஸ்ரேலிய படைகள் இடமாற்றி வருகின்றனர்.
வெளியேற்றப்படும் பாலஸ்தீனர்கள்
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்களை காசாவின் தெற்கு பகுதிக்கு இடம் மாற்றி வருகின்றனர்.
காசாவில் அதிக மக்கள்தொகை கொண்ட வடக்கு பகுதியை தாக்கி நகரை கைப்பற்றுவதே இஸ்ரேலின் இந்த திட்டத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
காசா நகரை முழுவதுமாக கட்டுப்பாட்டில் கொண்டு வர போவதாக இஸ்ரேல் அறிவித்த சில நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு கூடாரம் வழங்கும் இஸ்ரேல்
பொதுமக்களை இடமாற்றுவது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்த தகவலில், இஸ்ரேல் தாக்குதல் நடத்த இருப்பதால் பொதுமக்கள் “பாதுகாப்பு மண்டலம்” என அறிவிக்கப்பட்ட தெற்கு காசா பகுதிக்கு மக்கள் மாற்றப்படுகிறார்கள். இதற்காக பாலஸ்தீனர்களுக்கு கூடாரம் மற்றும் மற்ற அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் வழங்குகிறது.
இஸ்ரேலின் இந்த திட்டத்தால் கிட்டத்தட்ட 22 லட்சம் மக்கள் வாழும் பகுதி பாதிக்கப்படும் என சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மக்கள் போராட்டம்
புதிய தாக்குதல் திட்டத்தால் பிணைக் கைதிகள் நிலை மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் குடும்பத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |