ஹமாஸ் பிடியிலிருந்து விடுதலையானதற்காக வருந்துகிறேன்... பிரெஞ்சு இளம்பெண் கூறும் கண்ணீர் தகவல்
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்டு, காசாவில் 55 நாட்கள் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்து, நவம்பர் மாதம் 30ஆம் திகதி விடுவிக்கப்பட்ட சில இஸ்ரேலியர்களில் ஒருவர், இஸ்ரேல் பிரெஞ்சுக் குடிமகளான மியா (Mia Schem, 21).
Credit: Instagram
இன்னமும், பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காசாவில் பிணைக்கைதிகளாக இருக்கும் நிலையில், அவர்களை எண்ணி கண்ணீர் வடிக்கிறார் மியா.
ஹமாஸ் பிடியிலிருந்து விடுதலையானதற்காக வருந்துகிறேன்
தான் விடுவிக்கப்படும்போது, தன்னுடன் காசாவில் பிணைக்கைதிகளாக இருந்த மற்ற இஸ்ரேலியர்கள், தயவு செய்து, எங்களை இஸ்ரேல் அரசு மறந்துவிட விட்டு விடாதே என கேட்டுக்கொண்டார்களாம்.
Credit: Israel's Channel 13
அவர்கள் இன்னமும் பிணைக்கைதிகளாகத்தான் இருக்கிறார்கள். இஸ்ரேல் ஹமாஸ் மோதலும் தொடர்கிறது. ஆக, அவர்களை விடுவிக்க தன்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என ஆதங்கப்படும் மியா, என்னை மன்னித்துவிடுங்கள், ஹமாஸ் பிடியிலிருந்து விடுதலையானதற்காக நான் வருந்துகிறேன் என கண்ணீர் வடிக்கிறார்.
காசாவில் எல்லோருமே தீவிரவாதிகள்தான்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்காக உலகம் வருந்துகிறது. ஆனால் மியாவோ, காசாவிலிருக்கும் எல்லோருமே தீவிரவாதிகள்தான் என்கிறார். பெண்களும் குழந்தைகளும் வாழ்ந்த வீடு ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மியா, அவர்கள் அனைவருமே ஹமாஸுக்காக சேவை செய்வதாக தெரிவிக்கிறார்.
Credit: HAMAS/UNPIXS
கை உடைந்த நிலையில் கதறக் கதற மியாவைப் பிடித்துச் சென்றார்கள் ஹமாஸ் அமைப்பினர். அவர் தன் கை உடைந்துவிட்டது என அழுது கதறியதைத் தொடர்ந்து, அங்கிருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் மியாவுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மயக்கமருந்து கொடுக்காமலே மியாவுக்கு அந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய, கதறித் துடித்த மியாவைப் பார்த்து, சத்தம் போடாதே, இல்லையென்றால் சுரங்கப்பாதைக்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டினாராம் அந்த மருத்துவர்!
Credit: Getty
பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தங்களுக்கு ஹமாஸ் அமைப்பால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார் மியா.
Credit: https://twitter.com/visavistv/status/1730248965210149059
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |