மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான்: இஸ்ரோ வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மனிதர்களைக் கொண்டு செல்லும் அந்த விண்கலமானது "ககன்யான்" என கூறப்பட்டுள்ளது.
"ககன்யான்"
விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் இந்த விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று விண்வெளி வீரர்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.
Mission Gaganyaan:
— ISRO (@isro) October 7, 2023
ISRO to commence unmanned flight tests for the Gaganyaan mission.
Preparations for the Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1), which demonstrates the performance of the Crew Escape System, are underway.https://t.co/HSY0qfVDEH @indiannavy #Gaganyaan pic.twitter.com/XszSDEqs7w
விண்ணில் செல்லவிருக்கும் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த 3 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ரஷியாவில் சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகின்றது.
மேலும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டமானது வருகின்ற அக்டோபர் 21, 2023 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |