விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் - பாராசூட் சோதனை வெற்றி
ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது.
ககன்யான் திட்டம்
ககன்யான்(gaganyaan) திட்டத்தின் மூலம், 2027 ஆம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து மேற்கொண்ட திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்று வந்த சுபன்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
2027 ஆம் ஆண்டில் விண்வெளி செல்லும் அவர்கள், ஒரு வார காலம் விண்வெளியில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
பாராசூட் சோதனை வெற்றி
இந்நிலையில், வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த வான்வழி டிராப் சோதனை (IADT-01) இன்று நடைபெற்றது.
ISRO successfully accomplishes first Integrated Air Drop Test (IADT-01) for end to end demonstration of parachute based deceleration system for Gaganyaan missions. This test is a joint effort of ISRO, Indian Air Force, DRDO,Indian Navy and Indian Coast Guard pic.twitter.com/FGaAa1Ql6o
— ISRO (@isro) August 24, 2025
விண்கலம் போன்ற மாதிரி ஒன்றை ஹெலிகாப்டரில் இருந்து கீழே விட்டனர். அதில் இருந்த பாராசூட்கள் விரிந்து, விண்கல மாதிரி பாதுகாப்பாக கடலில் இறங்கியது. அதனை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
இந்த சோதனையில், இஸ்ரோ உடன் இந்திய விமான படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, DRDO ஆகியவை இணைந்து செயல்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |