நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனித்துளிகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ
கடந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையல் சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது. அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை திரட்டியது.
அந்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இஸ்ரோ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு துருவங்களிலும் (வடக்கு மற்றும் தெற்கு) மேற்பரப்பில் உள்ளதை விட முதல் இரண்டு மீட்டர்களில் நிலத்தடி பனியின் அளவு சுமார் 5 முதல் 8 மடங்கு அதிகமாக இருப்பதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை சீற்றத்தினால் நிலவின் மேற்பரப்பில் நீர் உருவாகியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தங்களது கருத்தை முன்வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து மேலதிக தகவல்களை இனி வரும் காலங்களில் இஸ்ரோ வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |