இஸ்ரோ ஊழியர்களின் சலுகைகள் என்ன தெரியுமா? வெளியானது சம்பள விபரம்!
இந்தியாவில் இருந்து நிலவிற்கு அனுப்பட்ட சந்திரயான்-3 விண்கத்தை தயாரித்த இஸ்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பணத்தொகை பட்டியல் வெளியாகியுள்ளது.
3,84,000 கி.மீ பயணம் செய்து நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்களை செய்வதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து வேலை செய்திருப்பார்கள்.
இந்நிலையில், இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் சம்பளம் என்ன? அவர்களுக்கு என்ன வகையான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் என அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதை தீர்க்கும் வகையில் விபரங்களும் வெளியாகியுள்ளது.
இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் அவர்களின் கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அமர்வில் வைக்கப்படுகின்றார்கள். அந்த அடிப்படையில் என்ன சம்பளம் என்று பார்க்கலாம்.
சம்பளம்
1. பொறியாளர்/விஞ்ஞானி - ST – ரூ.15,600-ரூ.39,100
2. பொறியாளர்/விஞ்ஞானி - SE ரூ.15,600-ரூ.39,100
3. பொறியாளர்/விஞ்ஞானி - SF ரூ. 37,400-ரூ.67,000
4. பொறியாளர்/விஞ்ஞானி - LG ரூ.37,400-ரூ.67,000
5. பொறியாளர்/விஞ்ஞானி - H ரூ.37,400-ரூ.67,000
6. சிறந்த விஞ்ஞானி - ரூ.67,000-ரூ.79,000
7. புகழ்பெற்ற விஞ்ஞானி - ரூ.75,500-ரூ.80,000
இவர்களுக்கு சம்பளம் மட்டும் இல்லாமல் ஒரு சில சலுகைகளையும் இஸ்ரோ வழங்குகின்றது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் பெறும் சலுகைகள்
1). அகவிலைப்படி (DA)
2). வீட்டு வாடகைப் படி (HRA)
3). மருத்துவ வசதிகள்
4). ஓய்வூதியம்
5). செயல்திறன் ஊக்குவிப்பு
6). வருங்கால வைப்பு நிதி (PF)
7). பயணப் படி (TA)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |