ஏழு வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த PSLV C-56 ராக்கெட்!
வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இன்று வணிகப் பணியின் ஒரு பகுதியான பிஎஸ்எல்வி சி-56 விண்ணில் ஏவியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு ஏவப்பட்டது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு இஸ்ரோவின் வணிகரீதியான ஏவுதளப் பணி இதுவாகும்.
இது சிங்கப்பூரின் DSSAR புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 6 சிறிய செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி56 விண்ணில் ஏவப்பட்டது.
ISRO
360 கிலோ எடை கொண்ட DSSAR செயற்கைக்கோளை 535 கிமீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.
ISRO
23 கிலோ எடையுள்ள மைக்ரோசாட்லைட் வேலோக்ஸ் ஏஎம், சோதனை செயற்கைக்கோள் வளிமண்டல இணைப்பு மற்றும் டைனமிக்ஸ் எக்ஸ்ப்ளோரர் (ஆர்கேட்), ஸ்கூப் 2, நியூலியன், கேலசியா 2 மற்றும் ஆர்ப் 12 ஆகியவையும் பிஎஸ்எல்வியில் ஏவப்பட்டன.
ISRO
செயற்கைக்கோளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். ஏப்ரல் 19-ஆம் திகதி, இஸ்ரோ சிங்கப்பூர் டெலியோஸ்-2 மற்றும் லூம்லைட்-4 ஆகிய 2 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வியில் ஏவியது.
ISRO
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Isro launches PSLV-C56 with 7 foreign satellites, Indian Space Research Organisation, Polar Satellite Launch Vehicle, seven foreign satellites