விண்வெளியில் விவசாயம் செய்து சாதனை.., ISRO வெளியிட்ட புகைப்படம்
விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அமைப்பு அறிவித்துள்ளது.
இது விண்வெளியில் விவசாயம் செய்யும் முயற்சியின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சோதனையின் வெற்றி, விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் இந்தியாவின் திறனைக் காட்டுகிறது.
இந்த சோதனையானது, குறைந்த புவியீர்ப்பு விசையில் தாவரங்களின் வளர்ச்சியை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள உதவும், இது நீண்ட விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும்.
Life sprouts in space! 🌱 VSSC's CROPS (Compact Research Module for Orbital Plant Studies) experiment onboard PSLV-C60 POEM-4 successfully sprouted cowpea seeds in 4 days. Leaves expected soon. #ISRO #BiologyInSpace pic.twitter.com/QG7LU7LcRR
— ISRO (@isro) January 4, 2025
இந்நிலையில், PSLV C-60 சாட்டிலைட்டின் துணைக்கோளான VSSC விண்கலத்தில், காராமணி விதைகள் முளைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, "விரைவில் இலைகள் உருவாகும்" என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், "காராமணி விதைகள் முளைவிட்டன, முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கிறோம். 7 நாள்களுக்குள் விதை முளைவிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாள்களில் முளைத்தன. வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன்கட்ட பரிசோதனை இதுவாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |