ISROவில் 435 வேலை காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியினது., எழுத்துத் தேர்வு இல்லை..
இஸ்ரோ மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த அறிவிப்பின் கீழ் 435 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படும். மொத்த பணியிடங்களில் 273 கிராஜுவேட் அப்ரெண்டிஸ் காலியிடங்களும், 162 டெக்னீசியன் அப்ரண்டிஸ் காலியிடங்களும் உள்ளன.
ஏரோநாட்டிக்கல்/ஏரோஸ்பேஸ், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்ஷன், ஃபயர் அண்ட் சேஃப்டி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி போன்றவற்றில் காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கிராஜுவேட் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பி.டெக்/ பிஇ/ பிஎஸ்சி/ பி.காம்/ பி.ஏ/ ஹோட்டல் மேனேஜ்மென்ட் இளங்கலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தொடர்புடைய சிறப்புப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட நிபுணத்துவத்தில் பொறியியல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் வயது 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளைக் கொண்ட எவரும் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்கலாம். நேர்காணல் மற்றும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
நேர்காணல் தேதி அக்டோபர் 7, 2023. நேர்காணல் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜராகலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு 12 மாதங்கள் அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படும். உதவித்தொகையாக மாதம் ரூ. 8,000 வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ISRO ஆட்சேர்ப்பு 2023, ISRO Recruitment 2023, ISRO Vacancies, Jobs at ISRO, ISRO Recruits Graduate Apprentice, Technician Apprentices, Indian Space Research Organisation