சந்திராயன்-3: விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை - இஸ்ரோ தகவல்
லேண்டர், ரோவரை எழுப்பும் முயற்சியில் சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம்
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.
நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி வைத்தது. ஆனால், நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது, இருள் சூழ்ந்த நிலவின் தென் துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை.
ISRO
இதனால் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது. பின்னர் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டது.
எழுப்பும் பணி
உறைபனியால் உறங்க வைக்கப்பட்ட விக்ரம் லேண்டரை உறங்கும் நிலையில் இருந்து எழுப்பும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
அதன்படி, விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எனினும், சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |