பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
ஆபரேஷன் சிந்தூரையடுத்து, இந்தியாவின் பாதுகாப்பிற்காக பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மே 18, 2025 அன்று PSLV-C61 ரொக்கெட் மூலம் ரிசாட்-1B (RISAT-1B) என்ற புதிய ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.
இந்த செயற்கைக்கோள் Operation Sindoor பின்னணியில் வெளிவரும் முக்கியமான செயற்பாடாக பார்க்கப்படுகிறது.
சுமார் 1,710 கிலோ எடையுள்ள ரிசாட்-1B, சூரியனுடன் ஒத்தபாதையில் (Sun-synchronous orbit) 529 கி.மீ உயரத்தில் நிலைநாட்டப்படும்.
இது முழுமையாக செயல்படத் தொடங்க மூன்று மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் C-band Synthetic Aperture Radar (SAR) கொண்டு அனைத்து காலநிலை, பகல்/இரவு நேரங்களிலும் தெளிவான நிலதள படங்களை அளிக்க முடியும்.
ரிசாட்-1B, பயங்கரவாத முகாம்கள், எல்லைப் பிரச்சனைகள் மற்றும் முக்கிய கட்டடங்களை கண்காணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் எல்லைகள், கடற்கரைப் பகுதிகள், பனிமலைகள், வனங்கள் என பலவகைபட்ட நிலப்பரப்புகளை கண்காணிக்க இது உதவும்.
இஸ்ரோ இதற்கு முந்தைய RISAT-2, RISAT-1, RISAT-2B, RISAT-2BR1 போன்ற செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக ஏவியுள்ளதுடன், இதுவும் அந்த தொடரில் அடுத்த பரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளின் விரைவான ஏவல், சமீபத்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கான விரைவு பதிலடையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |